Monday 6th of May 2024 07:46:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
தொற்று நோயை கனடா சிறப்பாக  கையாண்டது என்கிறாா் ட்ரூடோ!

தொற்று நோயை கனடா சிறப்பாக கையாண்டது என்கிறாா் ட்ரூடோ!


அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளை விட கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடியை கனடா சிறப்பாக கையாண்டதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட கனடாவில் இதுவரை 8,711 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன. 106,167 தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா்.

இன்னமும் சில இடங்கள் தொற்று நோய் மையங்களாக உள்ளபோதும், அங்கும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக நேற்று புதன்கிழமை ஒட்டாவாவில் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் ட்ரூடோ கூறினார்.

அமெரிக்காவில் 3 மில்லியனுக்கும் அதிகமான தொற்று நோயாளா்களுடன்,131,336 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்கங்களாக ஏறக்குறைய 24 மாநிலங்களில் தினசரி பதிவாகும் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அபாயகரமான வகையில் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் அண்டை நாடான அமெரிக்கா உட்பட எங்களின் நட்பு நாடுகளை விட எங்களால் தொற்று நோயை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் ட்ரூடோ குறிப்பிட்டார்.

கனடாவின் இந்த வெற்றி அதன் பொருளாதார செயற்பாடுகளை துரிதமாக மீள ஆரம்பிக்கும் முயற்சிகளுக்கு உதவும் என்றும் அவா் கூறினார்.

கனடாவும் அமெரிக்காவும் மார்ச் மாதத்திலிருந்து இரு நாடுகளுக்கிடையேயான எல்லைகளை மூடியுள்ளன. இந்த எல்லை மூடல் ஒப்பந்தம் ஜூலை 21 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அதனை மேலும் நீடிப்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜூலை 17 -க்குள் கனடாவின் இறப்பு எண்ணிக்கை 8,900 ஆக இருக்கும் என்று கனேடிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடாவில் தொற்று நோய் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே நேரத்தில் தொடர்பு தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் இன்னும் அவசியம் என அந்நாட்டு துணை தலைமை பொது சுகாதார அதிகாரி ஹோவர்ட் என்ஜூ கூறியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE